வெள்ளி, 25 ஜூன், 2010

தமிழ் நெறி ஞாயிறு பாவலர் அ. பு. திருமாலனாருக்கு அஞ்சல் தலை வெளியீடு மலேசியாவில் ஒரு வரலாற்றுப் பதிவு.


தமிழ் நெறி ஞாயிறு பாவலர் அ. பு. திருமாலனாருக்கு அஞ்சல் தலை வெளியீடு மலேசியாவில் ஒரு வரலாற்றுப் பதிவு.அண்மையில் மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர் அ. பு. திருமாலனாரின் படம் இணைந்த அஞ்சல் தலையை மலேசிய அஞ்சல் நிலையத்தாரின் ஒப்புதலோடு நாம் அறிமுகம் செய்தோம் இச்செய்தி மலேசிய நண்பன் நாளிதழில் 17 .06.10 ஆம் நாளிலும் தமிழ் நேசன் நாளிதழில் 18.06.10 நாளிலும் முதல் பக்கச் செய்தியாக வெளி வந்தது.

மலேசிய நண்பன் நாளிதழில் இச்செய்தி ஒரு வரலாற்றுப் பதிவு எனக் குறிப்பிடப் பட்டிருந்தது. நாடு தழுவிய அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி பலரும் என்னை அழைத்துப் பாராட்டு தெரிவித்தனர். வியந்தனர். இவ்வாறு நடக்குமா இயலுமா என்றெல்லாம் வினவினர்.
பெரியவர் ஒருவர் தொடர்பு கொண்டு இவ்வாறு அஞ்சல் தலையை எல்லாராலும் வெளியிட முடியும். இதனை அஞ்சல் நிலையத்தார் வெளியிட்டனர் என்பதும் வரலாற்றுச் செய்தி என்பதும் தப்பானது, திசை திருப்பி விடுகின்ற செய்தி. நீங்கள் நல்ல பனி செய்கிறீர்கள் . ஆனால் இது போன்ற செய்திகளால் உங்களுக்குச் சிக்கல் வரலாம். கவனித்துக் கொள்ளுங்கள்.அவர் நல்ல நோக்கத்தில் சொல்வதாகவே நான் எடுத்துக் கொண்டேன். இருப்பினும் அவரால் உண்மை நிலையை உணர முடியாமலும் ஏற்றுக்கொள்ள முடியாமலும் இருப்பதை எண்ணி வருந்தினேன்.

தொடரும்
http://muelangovan.blogspot.com/2009/03/blog-post_08.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக